புராண கால தருணத்தில் காட்டாறாக அதாவது தளபதிகளாக, போர் வீரர்களாக வாழ்ந்து பழகிப் போன ரெட்டிகள் பிற்காலத்தில் ஓர் இனிய தெளிந்த நீரோடையாக மாறிக் காணப்பட்டனர். இதனால் ஆன்மிகப் பணியிலும், அறப் பணியிலும் பலர் ஈடுபட்டனர் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட முடியும்.
ரெட்டியார் ஆன்மிகத் துறையில் பெரும் சாதனைகளைப் படைத்து வருபவர்.
புளியம்பட்டியில் புனித அந்தோனியார் என்ற கிறித்தவக் கோவிலையும், பிரார்த்தனைக் கூடத்தையும் இலவசமாகக் கட்டி கொடுத்துள்ளார்.
கோவில்பட்டியில் மசூதியைக் கட்டித் தந்து இதே ஊரில் ஹரிஜன மக்களுக்கென கல்யாண மண்டபமும் அம்பேத்கார் சிலையையும் தம் சொந்தச் செலவில் கட்டிக் கொடுத்துள்ளார்.
கூவலபுரம் சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருக்கோவில் திருப்பணி செய்து ரெட்டி இனத்திற்குப் பெருமை சேர்த்தவர்.
இது தவிர குற்றாலத்தில் குற்றால நாதர் திருக்கோவிலின் திருப்பணியும், நெல்லையில் நெல்லையப்பர் ஆலயத்தையும் கட்டிக் கொடுத்தவர்
மேலும் கோவில்பட்டியில் சென்பகவள்ளி அம்மன் ஆலையமும், சங்கரன்கோவில் திருப்பணியும் நிறைவேறக் காரணமானவர்.
விளாத்திகுளம் மீனாட்சியம்மன் கோவில் திருப்பணியும் இவரது ஆன்மிகப் பணிகளில் அடங்கும்.
இதேபோல் உயாநீதி மன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியனின் சொந்த ஊரில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தவரும் இவரே