பொதுவாக ரெட்டி அரசர்களின் ஆரம்பகால வரலாற்றைப் பின் வருமாறு பிரித்துக் காணலாம்.
1.காகதீய மன்னர்களின் ஆட்சியில் ரெட்டிகள்.
2.பாமினி சுல்தான்கள் காலத்தில் ரெட்டிகள்.
3.விஜய நகரப் பேரரசின் காலத்தில் ரெட்டிகள்.
Read More
பேரரசுகளின் அரசன் ரத, கஜ, துரக, பதாதி என்ற நான்கு பிரிவுகளின் தலைவனாக இருந்தான். அதே நேரத்தில் நாயன்கார முறை நடைமுறையில் இருந்தது. இது ஓர் இராணுவ நிர்வாக முறையேயாகும். படை வீரர்களைப் பாதுகாத்து வருவதற்குச் சம்பளமாகத் தளபதிகளுக்குப் பல கிராமங்கள் வழங்கப்படுவதே நாயன்கார முறையின் முக்கிய அம்சமாகும். தளபதிகள் கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட அளவு படை வீரர்களைத் தங்கள் வசம் வைத்திருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் மன்னன் போரில் ஈடுபடும்போது இந்தப் படை வீரர்கள் போருக்குச் செல்லவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
Read More
ரெட்டியார் சமூகத்தின் தோற்றத்தையும் வரலாற்றையும் அறியப் பெரிதும் உதவுவதாக ரெட்டி என்னும் சொல் உள்ளது. இச்சொல் மாற்றத்துக் குள்ளானதைப் போலத் தெலுங்கு மொழியில் வேறெந்தச் சொல்லும் மாற்றம் அடைந்ததில்லை. ரெட்டி என்னும் சொல்லே பல மாற்றத்துக்குப் பின் இறுதியாக விளங்கும் வடிவமாகும்.
நாம் ஆய்வில் முன்னிருந்து பின் செல்லுவோம். 16-ஆம் நூற்றாண்டில் தென்னாலி இராம கிருஷ்ணா தனது “பாண்டு ரெங்க மகாத்தியம்” என்ற நூலில் ரட்டிலுசுயனனடைர என்று குறிப்பிடுகிறார்.
17-ஆம் நூற்றாண்டில் பண்டிதர் மாலா ரெட்டி தன் ‘சிவதாரபோத்ரம்” என்ற நூலில் ரட்டிலு என்று குறிப்பிடுகிறார். 12-ஆம் நூற்றாண்டில் ‘சிவதத்வசாரம்” என்ற நூலை எழுதிய மல்லிகார்சுன பண்டிதாதித்யர் ‘ரட்டி” என்று கூறுகிறார்.
Read More
இராமன் காட்டுக்குச் சென்று பின்னர் நாடு திரும்பிய போது அயோத்தியில் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு அநுமனும் வானரப்படைகளும் விழா எடுத்தனர். விழாவுக்கு எனத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பயிர் செய்யப்பட்ட விளைநிலங்கள் அழிக்கப்பட்டது. இதனால் நகரங்கள் விரிவடைந்தன. எனவே ரெட்டிகளின் பயிர்த்தொழில் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அயோத்தியிலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்டனர்.
இவ்வாறு புறப்பட்ட முதல் ரெட்டி ஒக்கபில்லா மர்ரிபெல்த்தி ரெட்டி என்பவனாவான். இவன் தன் மனைவி, 3 குழந்தைகளுடன் பல ஆண்டுகள் தெற்கு நோக்கி நடந்தான்.
ஒக்கபில்லா மர்ரிபெல்த்தி ரெட்டியைப் பின் தொடர்ந்து ரெட்டிகள் தங்கள் மூட்டை முடிச்சிகளுடன் அயோத்தியை விட்டு கரிசல் நிலங்களை நோக்கிச் செல்ல அணி வகுத்து நின்றனர்.
Read More
கஞ்சம் ரெட்டிகள்: அயோத்தியிலிருந்து புறப்பட்ட இவர்கள் ஆந்திராவின் வடகோடியில் தங்கி பின் தெற்கு நோக்கி வந்தனர். இடையிலேயே தங்கிவிட்ட ஒரு பகுதியினர் ஒரிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் இப்போதும் உள்ளனர். தக்காண பகுதியான கஞ்சம் பகுதியிலிருந்து மேலும் விரிவடைந்து இவர்கள் குடி பெயர்ந்ததால் கஞ்சம் ரெட்டிகளே என்பது உறுதியாகிறது.
இவர்களில் அநேகர் அமைதியை நாடியும், தாங்கள் வாழ்வதற்கான புதிய இடங்களை நாடியும் தெற்கு நோக்கி வந்தனர். தெலுங்கானா பகுதியில் ரெட்டிகளில் ஒரு பிரிவினர் முஸ்லீம் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, இராணுவப் பொறுப்புகளிலிருந்து விடுபட்டு, வேளாண்மையை மேற்கொள்ளலாயினர்.
இதேபோல் விஜயநகர ஆட்சியின் போது, தெலுங்கு மக்களில் சிலர் முஸ்லீம்களின் தாக்குதலாலும், இயற்கையின் சீற்றங்களான கடும் பஞ்சத்தாலும், எதிர்பாராத புயல், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு கஞ்சம் பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கி வரலானார்கள்.
Read More
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தங்கிய ரெட்டி இனமக்கள், தங்களுக்குள் சங்கங்கள் அமைத்துத் தங்களின் தனித் தன்மையைக் காத்து வந்தனர்.
குலப்பெயர்களுக்கு ஏற்பவும் தங்கள் உட்பிரிவுகளுக்கு ஏற்பவும் சங்கங்கள் அமைத்து மடங்கள் நிறுவி செயல்படத் தெடங்கினர்.
1. முதன் முதலில் ‘அயோத்தி ரெட்டி’ என்ற பிரிவு ரெட்டிகள் தங்களுக்கென்று ஒரு சங்கத்தை விளாத்திகுளத்தில் அமைத்து பதிவு செய்து செயல்படத் தொடங்கினர். இதன்மூலம்பல நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. குறிப்பாக
Read More
கலைத் துறையில் பல வெற்றிப் படங்களைத் தந்து மக்கள் மனத்தில் நீங்காத இடத்தைப் பெற்ற பிரபல இயக்குநர்களாக டைரக்டர் ஸ்ரீதர் ஊ.ஏ.ராஜேந்திரன், டீ.N.மு.நாகிரெட்டி திருச்சி மாவட்டம் வேங்கடத்தானூர் N. வெங்கடேஷ், திருவள்ளுவர் கலைக் கூடம் திரு. ளு.ளு. துரைராஜ் போன்றோர் பிரசித்தி பெற்றவர்கள். இவர்கள் கலைத்துறையில் வியாபார நோக்கம் மட்டுமன்றி மக்களிடத்தில் மண்டிக் கிடந்த பழமையை ஒழித்துப் புதிய சிந்தனைகளைத் தூண்டியவர்கள் எனலாம்.
Read More
மொழி என்பது உலகில் இயற்கையாக அமைந்ததன்று. மக்கள் தங்களுக்குள் கருத்தை பரிமாறிக் கொண்டு பழக உருவாக்கிக்கொண்ட ஒரு கருவியேயாகும்.
முதலில் விந்திய மலைக்கு அருகில் உள்ள திரிலிங்கம் என்ற தலம் ரெட்டிகளின் குடியேற்றமாக ஆதியில் அமைந்தது. அங்கிருந்த பூர்வீக ஆந்திர மக்களின் மொழியோடு தமது பிராக்கிருத மொழியையும் இணைத்துப் பேசினர். அது ஒரு புது மொழியாக உருவெடுத்து தெலுங்கு என்றாயிற்று.
Read More
ஆதங்கி நாட்டின் அரசர் புரோலய வேமரெட்டி வடமொழியிலும், தெலுங்கிலும் நல்ல புலமை படைத்திருந்தார். புலவர்களுக்கு பெரும் சன்மானமும், தான தர்மங்களையும் செய்து மிக்க புகழ் பெற்றார். இவர் தமது பாடல்களில் கேள்விகளின் மூலம் மக்களைச் சிந்திக்கச் செய்தவர்.
1. பாலில் கழுவி கரியை வெண்மையாக்க முடியுமா?
2. பரிமாறும் கரண்டி சுவை அறியுமா?
போன்ற 4000 க்கும் மேல் உள்ள கேள்விகள் மூலம் மக்கள் சிந்தையைத் தூண்டி மூட நம்பிக்கையை அகற்ற அன்றே முற்பட்டவர்.
Read More
புராண காலத் தருணத்தில் காட்டாறாக அதாவது தளபதிகளாக, போர் வீரர்களாக வாழ்ந்து பழகிப் போன ரெட்டிகள் பிற்காலத்தில் ஓர் இனிய தெளிந்த நீரோடையாக மாறிக் காணப்பட்டனர். இதனால் ஆன்மிகப் பணியிலும், அறப் பணியிலும் பலர் ஈடுபட்டனர் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட முடியும்.
Read More
Read More
Read More