சென்னை இராஜதானியில் வாழ்ந்த தமிழக ரெட்டிகளில் சிறை சென்ற தியாகிகள் சுமார் 700க்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிய வருகிறது.
இவர்களின் தியாகத்தையும் உள்ளடிக்கி மலர்ந்ததுதான் இந்திய சுதந்திரம். நாடு விடுதலை பெறவும், சக்தி பெற்றதாய் விளங்கவும் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள், சகல சுகங்களையும் இழந்தவர்கள், சிறை வாசக் கொடுமைகளைத் தாங்கியவர்கள், மிருகத்தனமான அடி, சித்ரவதை, துப்பாக்கிச் சூடு இவற்றிற்கு ஆளாகி ஊனம் அடைந்த எண்ணற்ற ரெட்டிகளில் கிடைத்த தகவல்களின்படி ஒரு சிலரை இங்கு குறிப்பிட முடியும்.
திருப்பாதிரிப்புலியூர் இராதாகிருஷ்ண ரெட்டியார்: இவர் 1927-இல் சுதந்திர இயக்கத்தில் ஆர்வம் கொண்டு தம்மை முழுமையாக ஈடுபடுத்திக கொண்டார். 1930-இல் உப்புப் போரில் 6 மாத தண்டனையும், 1932-இல் ஒத்துழையாமை இயக்கத்தில் 5 மாத தண்டனையும் விதிக்கப்பட்டு கடலூர், அலிபுரம், சென்னை, கண்ணனூர் சிறைகளில் இருந்தவர்.
எய்யலூர் ஆ. சீதாராமன்: 1941-இல் தனி நபர் போராட்டத்தில் 31-3-1941-இல் சென்னையில் கைதாகி எழும்பூர் கோர்ட்டில் ஆறு வார தண்டனை பெற்று மத்திய சிறையில் இருந்து 14-5-1941-இல் வெளி வந்தார்.
உடையார்குடி இராஜகோபால் ரெட்டியார்: இவரும் 1941-இல் தனிநபர் இயக்கத்தில் ஐந்து மாத சிறை வாழ்வும், 1942-இல் நடந்த புரட்சியில் 1-9-42 முதல் 30-9-43 வரை காவல் சிறை வாசமும் அனுபவித்தவர்.
பூலாமேடு சு. ஜெகந்நாத ரெட்டியார்: விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர் 1935-இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து 1941-இல் தனி நபர் போராட்ட பிரசாரத்திற்காக சென்னையில் 5-5-41-இல் சிறை பிடிக்கப்பட்டார். ஆறு வார சிறைவாசத்திற்குப் பின் 5-6-41-இல் விடுதலை ஆனார். ஆனால் 2-வது முறையாக பாதயாத்திரை பயணத்தின்கோது 28-7-41-இல் சென்னையில் 6 மாத தண்டனை பெற்று அலிபுரம் சிறையிலிருந்து 15-12-41-இல் விடுதலை ஆனார். 1942 ஆகஸ்டு புரட்சியின் போது சிதம்பரத்தில் போலீசால் பிடிக்கப்பட்டு கடுமையாக அடிபட்டார். தமிழக அரசின் தாமிர பத்திரம் பெற்றவர்.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் முத்துவரதா ரெட்டியார்: ளு.ளு.டு.ஊ. படித்து முடித்த இவர் 1921-இல் தேச விடுதலை இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். 1941-இல் தனி நபர் போராட்டமென்ற யுத்த எதிர்ப்புப் போரில் தமது கிராமத்திலேயே கைது செய்யப்பட்டவர். திண்டிவனம் சப்-கலைக்டர் இவருக்கு 3 மாத சிறை விதித்ததால் வேலூர் மத்திய சிறையிலிருந்து 21-4-41-இல் விடுதலையானார்.