ஆளுமை கொண்ட ரெட்டி சமுதாயத்தினர் பெரும்பாலானோர் தற்போது விவசாயத் தொழிலில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துச் சொல்ல முடியாத அளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர். விவசாயம் அல்லாத வேறு தொழிலில் ஈடுபட்ட ஒரு சிலரே செல்வாக்குடன் இருக்கின்றனர் எனலாம். அவர்களில் பெரும்பாலோர் தெலுங்கு பேசும் ரெட்டிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஓபுல் ரெட்டி,னுச. ஊ.ஆ.மு. ரெட்டி,P. நாகிரெட்டி போன்றவர்களும் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் அனைவரும் அண்மைக் காலத்தில் ஆந்திராவிலிருந்து சென்னையில் குடியேறி இன்றுவரை தெலுங்கையே தாய்மொழியாகக் கொண்டவர்கள் எனலாம்.
ஆனால் தமிழ்பேசும் ரெட்டிகளில் 95 சதவீதத்தினர் பின்தங்கியவர்கள். இருந்தும் ரெட்டி இனத்தவர்களின் உயர்ந்த குணங்களான விருந்து உபசரிப்பு, உணவு பரிமாறுதல், சகிப்புத் தன்மைகளில் ரெட்டிகளுக்கு நிகர் ரெட்டிகளே என்றால் அது மிகையாகாது. இவர்கள் கல்வி கற்கவும், அரசு வேலைவாய்ப்பு பெறவும், பொருளாதார, சமூக ரீதியிலும் தங்களை மேம்படுத்திக் கொள்ள இன்றளவும் பெருமளவில் சிரமப்பட்டு சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலை, ரெட்டி இன மக்கள் மனதில் பெரும் கவலையை ஏற்படுத்துவதுடன் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி வருகிறது.
தற்கால நிலைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டால் இன்றைய நிலையில் ரெட்டி சமூகத்தின் பெரும்பான்மையோர் ஏழைகள்ƒ வளமேதும் இல்லாத சிறு நிலச் சொந்தக்காரர்கள், விவசாயக் கூலிகள் என வறுமைக் கோட்டை ஒட்டியேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
விவசாயத் தொழிலுக்கு மரியாதை இருந்தவரை ரெட்டிகள் கல்வி, உத்தியோக சலுகைகளைப் பற்றி கவலைப்படவில்லை. எனவேதான் ரெட்டி இனத்தில் கற்றோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நாடார், வேளாளர், நகரத்தார் முதலியோர் கல்வியில் பெற்றுள்ள முன்னேற்றத்தை இன்னும் ரெட்டி சமூகம் பெறவில்லை. இதற்கு அடிப்படைக் காரணத்தை ஆய்வு செய்தால் விவசாயம் இவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தது என்பதை நன்கு அறிய முடியும். விவசாயத்தைப் பேணி பாதுகாக்க வேண்டி இருந்ததாலும், விவசாயம் இலாபகரமாக இல்லாததுமே முதல் காரணம் எனலாம். விவசாயத்தால் நலிவுற்றதால் ரெட்டிகள் மேற்படிப்பைத் தொடரப் போதிய பொருளாதார வசதியின்மையும், ஊக்கமின்னையும், அரசின் ஆதரவின்மையும் மற்றொரு காரணம் எனலாம்.
தமிழகம் முழுவதும் பரவலாக அமைதிகாத்து நெல்லிக்காய்கள் போல் சிதறியிருந்த ரெட்டி இன மக்கள், இன்று மாநிலம் முழுவதும் ஒரே கொடியின் கீழ் சங்கம் அமைத்து “தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம்” என்ற பெயரில் ஒன்றுபட்டு செயல்படத் தொடங்கிவிட்டனர்.