எனவே பெரும் பிரபுக்கள் சுதந்திரமாக செயல்படத் துவங்கினர். „நில மானிய முறை… விஜயநகர ஆட்சிக் காலத்தில் இருந்தது என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகினறனர். நில மானிய பிரபுக்கள் நாயக்கர்கள் என்று அழைக்கப்பட்டனர். பிரபுக்கள் கட்டாயமாக இராணுவ உதவிகளை அரசருக்குச் செய்து தரவேண்டும் என்று கூறப்பட்டது. பல நாட்டாண்மைக்காரர்கள் ஒன்று சேர்ந்து ஓர் இராணுவ கூட்டமைப்பின் கீழ் பேரரசில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்று பேராசிரியர் மு.யு. நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளார். இதனாலேயே இன்றும் தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்களில் ரெட்டி என்கின்ற சொல் காணப்படுகிறது என்பதைப் பல சான்றுகளின் மூலம் அறிய முடியும். உதாரணம் ரெட்டியூர், ரெட்டியார்பாளையம், ரெட்டியார்பட்டி, பொட்டுரெட்டிபட்டி, பாப்பிரெட்டிபட்டி, ரெட்டிச்சாவடி, ரெட்டிகுப்பம் என்பனவயாகும்.
தக்காணப் பகுதியில் மக்கள் முக்கியமாக நான்கு சாதிகளாகப் பிரித்து காணப்பட்டனர். பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எனப்பட்டனர். சாளுக்கிய, இராட்டிரகூடர்கள் ஆட்சிக் காலத்தில் சமூக அமைப்பில் பிராமணர்கள் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர். வேதம் ஓதுதல், கற்பித்தல், ஹிந்து தத்துவ உண்மைகளைப் போதித்தல், சமய சடங்குகளைச் செய்தல் போன்ற பரம்பரை தொழில்களைச் செய்து வந்தனர். வான சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். பொதுவாக சமுதாயத்தில் 18 வகையான மக்கள் இருந்தனர். அதிகாரிகள், கொல்லர், கருமார் , பானை செய்வோர், நெசவாளர், சாயம் தேய்ப்போர், எண்ணெய் வடிப்போர், பஞ்சமர்;, தையல் கலைஞர், நூற்போர், பொருட்களை வண்டிகளில் ஏற்றிச் செல்வோர், பசு மேய்ப்போர், வேட்டையாடுவோர், சலவைத் தொழில் புரிவோர், முடி திருத்துவோர் எனப்பட்டோர் ஆவார்கள்.
இந்தப் பதினெட்டு வகை மக்களும் தங்களுக்குள் ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். தங்களுக்குள் குலப் பெரியவர் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துச் சுங்கவரி போன்றவற்றை வசூல் செய்து சமுதாய நலன்களுக்கு அதனைப் பயன்படுத்திக் கொண்டனர். இரண்டாம் தேவராயரது காலத்துக் கல்வெட்டொன்று 74 சாதிப் பிரிவுகள் இவர்களுள் இருந்தன எனத் தெரிவிக்கின்றது.
கிராமத் தலைவர் விவசாய குலத்தைச் சேர்ந்தவராகவும், கணக்காளர் பிராமணராகவும் இருந்தனர். பேராசிரியர் னு.று. எல்லிஸ் என்பவர் ‘உழுகுடிகள் அனைவரும் வலங்கையர் என்றும், அது அல்லாத மற்றவர்கள் வணிகர்கள், கைவினைஞர்கள் இடங்கையர் என்றும்” கருதப்பட்டதாகத் தெரிவிக்கிறார். ஆ. ஸ்ரீனிவாச ஐயங்காரும் இதே கருத்தை ஏற்கிறார். இதில் ரெட்டி என்ற சாதி இருந்ததாக வரலாற்று ஏடுகளில் காணமுடியவில்லை. இக் காலத்தில் நிலவிய நான்கு வருணப் பாகுபாட்டில் இவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் சூர்ய வம்ச சத்திரியர்கள் குலத்தைச் சார்ந்தவர்கள் எனக் கருதுகின்றனர். பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் சத்திரியர்கள்.
நாட்டை ஆளும் பொறுப்பு இந்த வகுப்பினர்களிடம் இருந்தது. நாடாளும் அரசர்களைக் கொண்ட சத்திரியர்களில் இரு பிரிவுகள் காணப்படுகின்றன. சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களென்றும், சந்திர குலத்தைச் சேர்ந்தவர்களென்றும் அழைக்கப்பட்ட இவர்களுக்குப் போர் செய்வது முக்கிய தொழிலானாலும் எல்லா சத்திரியர்களும் இத் தொழிலை மேற்கொள்ளவில்லை. விவசாயத் தொழிலில் பெரும்பாலோர் ஈடுபட்டிருந்தனர்.
back to previous page