ரெட்டியார் சமூகத்தின் தோற்றத்தையும் வரலாற்றையும் அறியப் பெரிதும் உதவுவதாக ரெட்டி என்னும் சொல் உள்ளது. இச்சொல் மாற்றத்துக்குள்ளானதைப் போல தெலுங்கு மொழியில் வேறெந்தச் சொல்லும் மாற்றம் அடைந்ததில்லை. ரெட்டி என்னும் சொல்லே பல மாற்றத்துக்குப் பின் இறுதியாக விளங்கும் வடிவமாகும்.
நாம் ஆய்வில் முன்னிருந்து பின் செல்லுவோம். 16-ஆம் நூற்றாண்டில் தென்னாலி இராம கிருஷ்ணா தனது “பாண்டு ரெங்க மகாத்தியம்” என்ற நூலில் ரட்டிலுசுயனனடைர என்று குறிப்பிடுகிறார்.
17-ஆம் நூற்றாண்டில் பண்டிதர் மாலா ரெட்டி தன் "சிவதாரபோத்ரம்" என்ற நூலில் ரட்டிலு என்று குறிப்பிடுகிறார். 12-ஆம் நூற்றாண்டில் "சிவதத்வசாரம்" என்ற நூலை எழுதிய மல்லிகார்சுன பண்டிதாதித்யர் "ரட்டி" என்று கூறுகிறார்.
மசூலிப்பட்டினம் கல்வெட்டு கீழ் கண்டவாறு கூறுகின்றது
என்றும் முன்பு ரெட்டிகளைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
குண்டூர், கடப்பை, கர்நூல் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட கீழைச் சாளுக்கிய தெலுங்குக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்ற மாற்றங்களைக் கீழே காண்போம்.
குலோத்துங்கன் கால தக்ரம் கல்வெட்டில் ரட்டாடமு (ரட்டா-டமு) என்று காணப்படும் சொல்லின் பொருள் ரட்டியின் அலுவலகம் என்பதாகும். இதன் குறுகிய உச்சரிப்பு ரெட்டாடி என்பது, ரட்டாகுடி என்ற சொல்லின் திரிபாக மாறுகிறது என ஆய்வார்கள் கூறுகின்றனர்.
இதுவே இராஷ்டிரகூடம் - நிலத்தின் பெரும் பரப்பைக் குறிக்கின்றது. 7-ஆம் நூற்றாண்டில் மாலக்கோடு (ஆயடமாநன) பகுதியை ஆண்ட மன்னர்கள் தங்கள் பெயர் முன் ரட்ட என்ற சொல்லைப் பயன்படுத்தினர். சமஸ்கிருத சொல் ‘ரட்டா வம்பெம்” ரட்டா குலம் என்று கொள்ளலாம். ‘ராஷ்டிரா” ராஜ்யம் (நாடு) ஆண்டவர்கள் ரட்டா எனக் கூறிக்கொண்டனர்.
என்ற சொல் இதனைக் குறிக்கும்.
back to previous page