இராமன் காட்டுக்குச் சென்று பின்னர் நாடு திரும்பிய போது அயோத்தியில் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு அநுமனும் வானரப்படைகளும் விழா எடுத்தனர். விழாவுக்கு எனத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பயிர் செய்யப்பட்ட விளைநிலங்கள் அழிக்கப்பட்டது. இதனால் நகரங்கள் விரிவடைந்தன. எனவே ரெட்டிகளின் பயிர்த்தொழில் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அயோத்தியிலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்டனர். இவ்வாறு புறப்பட்ட முதல் ரெட்டி ஒக்கபில்லா மர்ரிபெல்த்தி ரெட்டி என்பவனாவான். இவன் தன் மனைவி, 3 குழந்தைகளுடன் பல ஆண்டுகள் தெற்கு நோக்கி நடந்தான்.
ஒக்கபில்லா மர்ரிபெல்த்தி ரெட்டியைப் பின் தொடர்ந்து ரெட்டிகள் தங்கள் மூட்டை முடிச்சிகளுடன் அயோத்தியை விட்டு கரிசல் நிலங்களை நோக்கிச் செல்ல அணி வகுத்து நின்றனர். ஸ்ரீ ராமன் நகர் வலம் வந்தபோது தெரு முனையில் அவர்களைப் பார்த்து „ஏன் வெளியூர் செல்கிறீர்கள்?… என்று வினவினான். விளைநிலங்கள் நகரமைப்புக்குப் பயன் படுத்தப்படுகின்ற செயலையும், வானரப் படைகளின் தொல்லைகளையும் ஸ்ரீராமனிடம் ரெட்டிகள் தெரிவித்தனர். நிலையை உணர்ந்த ஸ்ரீ ராமனும் அவர்களை வாழ்த்தி விடை கொடுத்தான். கும்பல் கும்பலாகப் பல ஆயிரம் மைல்கள் கரிசல் நிலம் நோக்கிப் பல நூறு நாட்கள் நடந்தே சென்றனர். அப்போது ரெட்டிகள் பலருக்கும் ஆங்காங்கே குழந்தைகள் பிறந்தன. அயோத்தியிலிருந்து புறப்பட்ட இவர்களே „அயோத்தி ரெட்டிகள்… என அழைக்கப்படுகின்றனர். இந்தப் பூர்வீக குடியிலிருந்தே மற்ற பிரிவுகள் ஏற்பட்டிருக்கிறது என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வாரங்கல்லை தலைநகராகக் கொண்ட பிரதாபருத்திரன் ரெட்டிகளுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். ரெட்டிகளுக்கெதிராக பல சதித் திட்டங்களைச் செய்தான். இதன்படி ஜங்கமன் ஒருவனை ரெட்டியின் வீட்டில் வேலைக்கமர்த்தினான். ஒரு நாள் எண்ணை ஸ்நானம் செய்த ரெட்டியின் மனைவி தனது ஒளி மிக்க கம்மலைக் கழற்றி வைத்துவிட்டு குளிக்கச் சென்றபோது ஜங்கமன் அக்கம்மலை திருடி, அரசனின் திட்டப்படி அவனிடம் ஒப்படைத்தான். உடனே தனது வீட்டில் கழற்றி வைத்த கம்மல், களவாடப்பட்ட செய்தியை அனைத்து ரெட்டி குடும்பங்களுக்கும் பொருளை இழந்த ரெட்டியால் அறிவிக்கப்பட்டது. அரசன் சதித்திட்டத்தை எதிர்க்க ரெட்டிகள் ஒன்றுபட்டு அரசனோடு போரிட முடிவு செய்தனர்.
அரசன் யோசனை செய்து போரிலிருந்து பின் வாங்கினான். சரியாக வரி செலுத்தாததால் கம்மலைத் தானே எடுத்துக் கொண்டதாகக் கூறி ரெட்டிகளிடையே குழப்பத்தையும், பிரிவையும் உண்டாக்க சூழ்ச்சி செய்தான்.
இதனால், ஒற்றுமையுடன் இருந்த ரெட்டிகள் தங்களின் குண அடிப்படையில் தம் நிலைகளை மாற்றிக் கொண்டனர். இதன்படி திறை செலுத்த வேண்டுமென்ற நியாயத்தை உணர்ந்த, எதிர்க்கத் திறனற்ற சிலர் நாட்டை விட்டு காடுகளுக்குச் சென்று விவசாயத்தில் ஈடுபட்டவர்கள் பன்ட்ட ரெட்டிகள் எனப்பட்டனர்.
மற்றும் சிலர் அரசனிடம் அனுகூலமான போக்கைக் கடைபிடித்து அரண்மனை மற்றும் அரசாங்கத்தில் சில சலுகைகளுடன் போக போக்கியங்களில் மூழ்கினர். இவர்கள் போகநாட்டு ரெட்டி எனப்பட்டனர்.
ஒரு பிரிவினர் ரெட்டிகளுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலையை தொடரவிட்டால் பின்னர் உள்ள அனைவர்க்கும் இப் பாதிப்பு ஏற்படும் என்று துணிச்சலுடன் எதிர்த்துப் போராடித் தற்காப்பு செய்து கொள்ள எண்ணிப் போரிட்டனர். தேக சூரர்களான இவர்கள் தேசூர் ரெட்டிகள் எனப்பட்டனர்.
இன்னும் சிலர் அரசனின் ரெட்டி இனத்திற்கு எதிரான இச்செயல்களுக்குச் சரியான பாடம் புகட்ட மலைப் பகுதிகளில் பதுங்கியும், தக்க தருணம் எதிர்பார்த்து தாக்கவும் முனைந்தனர். மலைப் பகுதியில் அடைக்கலம் சென்ற இவர்கள் கொண்ட ரெட்டிகள் எனப்பட்டனர்.
இவ்வாறு, ரெட்டிகளின் பூர்வீகம் குறித்து ஆந்திரப் புராணங்கள் ரெட்டிகளில் ஏற்பட்ட பிரிவுகளைப் பற்றி வர்ணிக்கின்றன. இப்பிரிவுகள் எத்தனை ஆயினும் அனைவரும் அயோத்தியிலிருந்து வந்த பூர்வீக ரெட்டிகளே என்பதில் மாற்றுக் கருத்தை, இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை
840 கோத்திரங்களும் 320 குலங்களும், 30க்கும் மேற்பட்ட பிரிவுகளும் உள்ளனவாக ஆந்திர வரலாற்று நூலான ‘ஆந்திரயுக்” குறிப்பிடுகிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்த ரெட்டிகள் 30 க்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பிரித்து சொல்லப்பட்டாலும் யார் யார் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் எனச் சொல்லமுடியாத நிலையிலேயே வாழ்கின்றனர். இதனை அரசாங்க குறிப்பான „தட்சண ராஜிய சம்பூர்ண யாத்திரை… என்ற நூலில் பார்த்தசாரதி நாயுடு அவர்களும், „ரெட்ல கோத்ராலு… என்ற நூலில் கஸ்தூரி ராகவ ரெட்டி அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.
back to previous page