தமிழகத்தில் ரெட்டி சமூக உட்பிரிவுகள்

தமிழகத்தில் ரெட்டி சமூக உட்பிரிவுகள்

கஞ்சம் ரெட்டிகள்: அயோத்தியிலிருந்து புறப்பட்ட இவர்கள் ஆந்திராவின் வடகோடியில் தங்கி பின் தெற்கு நோக்கி வந்தனர். இடையிலேயே தங்கிவிட்ட ஒரு பகுதியினர் ஒரிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் இப்போதும் உள்ளனர். தக்காண பகுதியான கஞ்சம் பகுதியிலிருந்து மேலும் விரிவடைந்து இவர்கள் குடி பெயர்ந்ததால் கஞ்சம் ரெட்டிகளே என்பது உறுதியாகிறது.

இவர்களில் அநேகர் அமைதியை நாடியும், தாங்கள் வாழ்வதற்கான புதிய இடங்களை நாடியும் தெற்கு நோக்கி வந்தனர். தெலுங்கானா பகுதியில் ரெட்டிகளில் ஒரு பிரிவினர் முஸ்லீம் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, இராணுவப் பொறுப்புகளிலிருந்து விடுபட்டு, வேளாண்மையை மேற்கொள்ளலாயினர்.

இதேபோல் விஜயநகர ஆட்சியின் போது, தெலுங்கு மக்களில் சிலர் முஸ்லீம்களின் தாக்குதலாலும், இயற்கையின் சீற்றங்களான கடும் பஞ்சத்தாலும், எதிர்பாராத புயல், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு கஞ்சம் பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கி வரலானார்கள்.

இவர்கள் தங்கள் அரசர்களோடும் பரிவாரங்களோடும் தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் குடியேறினர். இவ்வாறு குடிபெயர்ந்து தெற்கு நோக்கி வரும்போது, தமக்குத் தேவையான ஏவலாட்களையும் உடன் அழைத்து வந்தார்கள் என்று விஜயநகர பேரரசின் வரலரற்றை ஆய்வு செய்த வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பாக து.கு. கிரின்சு என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடும்போது ‘இவர்களின் குடியேற்றம் பல்வேறு காரணங்களால் நிகழ்ந்திருக்கலாம் என்றும், இடத்திற்கு ஏற்றவாறு தம்மை அழைத்துக் கொண்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார். இதனாலேயே பழக்க, வழக்கங்கள், மொழி இவர்களிடையே மாறுபட்டிருக்கக்கூடும் என்பது இவரின் கருத்து”.

கொண்டவீடு வீழ்ச்சிக்குப் பிறகு சுல்தான்கள் காலத்தில் சென்னை இராஜதானியில் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டு குடியேறிய ரெட்டிகள், பல குடும்பப் பெயர்களால் அழைக்கப்பட்டனர். இக்குடும்பப் பெயர்களே பிற்காலத்தில் பல உட்பிரிவுகளாக அழைக்கப்படுகின்றன.

கி.பி. 1456-இல் முதன் முதலாக திருச்சி மாவடட்டம் செட்டி குளத்தில் 200 பேர் கொண்ட தரைப்படையுடன் எர்ரம ரெட்டி வந்து இறங்கி ஆட்சி செய்யலானான். எர்ரம ரெட்டியின் தளபதிகளாக நல்லப்ப ரெட்டி, லிங்கா ரெட்டி என்பவர்கள் இருந்தனராகவும், இவர்கள் காட்டுப்புத்தூர், துரைமங்களம் பகுதியில் குடிகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இவனைத் தொடர்ந்து மகாதேவி என்ற இடத்தில் தளபதி ராமிரெட்டி 500 காலாட் படையுடன் வந்தான். இவன் அப்பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்தான். அனைத்து தரப்பினரும் அவனுக்குக் கப்பம் செலுத்தினர். அப்பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை போன்றவைகளைத் தடுத்து சிற்றரசனாகவே மதிக்கப்பட்டான். இதனைத் தொடர்ந்து பலர் விஜயநகர ஆட்சியில் ஜமீன்களாகவும், பாளையக்காரர்களாகவும் பரவலாக வந்து குடியேறினர். குறிப்பாக எருமைப்பட்டி, முத்துகாபட்டி, தொட்டியம், ஒல்பிபாளையம், லத்திவாடி, அலங்காநத்தம் பகுதிகளில் மிராசுதாரர்களாகவும், பெரம்பலூர், ஆத்தூர், முசிறி பகுதிகளில் பன்ட்டகாபுகளும் குடியேறினர்.

பன்ட்ட ரெட்டிகாரு : இவர்களில் சிலர் காடுகளுக்குச் சென்று பயிர்த் தொழில் செய்ததால் பன்ட்ட ரெட்டிகள் எனப்பட்டனர். பணிந்து நின்று கேட்கும் உழைத்த ரெட்டிக்குத் தருவதைவிட எதிர்த்து ஏசிப் பேசி சண்டியர்களுக்குச் சகல மரியாதை தருவர் இந்த ரெட்டிகள். இவர்கள் எந்தக் கோத்திரத்திலும் பெண் எடுத்துக் கொள்ளும் அரிய கலாச்சாரம் கொண்டவர்கள். இவர்களுக்குள் 14 உட்பிரிவுகள் காணப்படுகின்றன. இவர்கள் வேளாண்மையைப் பிரதானமாகக் கொண்டு தொழில் செய்தவர்கள். பொதுவாக தமிழகத்தில் எந்த பகுதியில் எந்தெந்த பிரிவினர் வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளங்கள் உறுதிபடக் காண முடியவில்லை.

கம்மவாரு, காஜலவாரு, பலிஜவாரு : இப்பிரிவினர் ரெட்டி இனத்திலிருந்து 6 நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒதுங்கியவர்கள் எனலாம். நாயுடு என்ற பட்டத்துடன் வாழ்பவர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை கம்மா-ரெட்டி உறவுகள் பெரிய அளவில் இணக்கம் இல்லை என்றாலும் பகை இல்லை எனலாம்.

back to previous page