தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தங்கிய ரெட்டி இனமக்கள், தங்களுக்குள் சங்கங்கள் அமைத்துத் தங்களின் தனித் தன்மையைக் காத்து வந்தனர். குலப்பெயர்களுக்கு ஏற்பவும் தங்கள் உட்பிரிவுகளுக்கு ஏற்பவும் சங்கங்கள் அமைத்து மடங்கள் நிறுவி செயல்படத் தெடங்கினர்.
முதன் முதலில் ‘அயோத்தி ரெட்டி’ என்ற பிரிவு ரெட்டிகள் தங்களுக்கென்று ஒரு சங்கத்தை விளாத்திகுளத்தில் அமைத்து பதிவு செய்து செயல்படத் தொடங்கினர். இதன்மூலம்பல நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. குறிப்பாக
மதுரை இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ‘கெண்டிக்கோட்டை ரெட்டி’ என்ற பிரிவு ரெட்டிகள் ‘கள்ளிக்குடி ரெட்டி மகாஜன சங்கம்’ என்ற பெயரில் திருமங்கலம் வட்டம் அதத்தாபட்டி யு.டு.யு. இராமச்சந்திர ரெட்டி அவர்களின் முயற்சியால் 1941 செப்டம்பர் 9இல் சங்கத்தை நிறுவினர். கள்ளிக்குடியில் வாணிக வளாகமும் கட்டி சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். மேலே குறிப்பிட்ட இரு பிரிவினரும் மதுரை, நெல்லை, இராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 800 கிராமங்களில் அதிகம் வாழும் இவர்கள் பிறப்பால் வைணவர்களாக இருந்தாலும் பெரும்பாலும் முருக பக்தர்களாகவே காணப்படுகின்றனர். இது தவிர அருப்புக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் திரு. மு.மு.ளு.ளு.சு.ராமச்சந்திரன் அவர்களின் ஆலோசனையின்படி செயல்படும் இவர்கள் அறக்கட்டளை அமைத்துத் திருமண மண்டபம் ஒன்றையும் நிர்வகித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்ட ரெட்டிகள் செட்டிகுளத்தில் ஒரு மடத்தினை நிறுவி செயல்பட்டு வந்தனர். பின்னர் அண்மைக் காலத்தில் திருச்சி மாவட்ட ரெட்டிநல சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ரெட்டி கல்வி அறக்கட்டளை மூலம் „காவேரி மகளிர் கலைக் கல்லூரியும்…, „காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி… ஒன்றும் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பல ஏழைக் குழந்தைகளுக்குக் கல்லூரிக் கல்விக் கட்டணமும், தங்க இடமும், உண்ண உணவும் இலவசமாக வழங்கி, இதன் மூலம் கல்வி கற்று வருகிறார்கள்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஒருசில பகுதியிலும், மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் உள்ள பொன்கலை நாட்டு ரெட்டி பிரிவினர் கரூர்-தாந்தோன்றி மலை பகுதியில் „பொன்கலை நாட்டு ரெட்டி நலச்சங்கம்’ என்ற பெயரிலும் செயல்படுகின்றனர். இச்சங்கம் ஒரு திருமணமண்டபத்தை தான்தோன்றி மலையில் நிறுவி சிறப்பாக நிர்வகித்து வருகிறது. இதன் மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ‘பன்ட்ட ரெட்டி’ என்ற பிரிவு ரெட்டிகள்,‘தென்னிந்திய ரெட்டிஜன சங்கம்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இதில் ஒரு திருமண மண்டபத்தை நிறுவி சிறப்பாகச் செயல்படுகின்றனர். இதன் தலைவராக நீண்ட நாட்கள்வரை விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு திரு. சுப்ரமணிய ரெட்டியார் (நுஆளு) செயல்பட்டு வந்தவர். இவரது காலத்தில் தென்னிந்திய ரெட்டி நலச் சங்கத்தின் சொத்துக்களை சிறப்பாக பராமரித்தும், புகழ் பெற்ற திவான்பகதூர் சுப்பராயலு ரெட்டியார் அவர்களின் பெயரில் திருமண மண்டபத்தையும் உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இதன் மூலம் ரெட்டி இன ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவிகளும் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் பன்ட்ட ரெட்டி நிர்வாக சத்திரத்திற்குரிய இடம்; 1875 வாக்கில் நு.சு. சீத்தாராம ரெட்டியின் தாத்தா சித்து ரெட்டியால் வழங்கப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள பன்ட்ட ரெட்டி என்ற பிரிவு ரெட்டிகள்1969 பிப்ரவரி 17ல் பன்ட்டரெட்டி சத்திரத்தை நிர்வகிக்க முறையான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினர். இதன் மூலம் மாணவர்கள் படிக்க கல்வி உதவித் தொகையும், 1978 முதல் இலவசத் திருமணங்களும் நடத்தி வருகிறது. ‘போங்கு நாட்டு ரெட்டி’ என்ற பிரிவினரும்;, போகநாட்டு பிரிவினரும் மடம் ஒன்றை நிறுவியும் தனித்தனியே செயல்படுகின்றனர்.
காஞ்சிபுரம் பகுதியில் வாழ்கின்ற,„பெனுகொண்ட ரெட்டி… என்ற பிரிவு ரெட்டிகள் தங்களுக்கென ஒரு மடத்தை காஞ்சிபுரத்தில் நிறுவி வாழ்ந்து வருகின்றனர். இப்பிரிவு ரெட்டிகள் வேலூர், கர்நாடக பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறார்கள். பெங்க;ரில் இவ் அமைப்பு மிகப் பெரிய அளவில் கல்வி ஸ்தாபனங்களை அமைத்து செயல்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் தேசூர் ரெட்டி பிரிவினர் தங்களுக்கென „தேசூர் ரெட்டிஜனசங்கம்… அமைத்து செயல்படுகின்றனர். தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ரெட்டி நலச் சங்கமாக இது செயல்பட்டு வருகிறது.
தருமபுரி பகுதியில் „மொரச ரெட்டி… என்ற பிரிவு ரெட்டிகள், தங்களுக்கென ஒரு மடத்தை நார்த்தமலையில் நிறுவிசெயல்பட்டு வந்தனர். இவர்களுக்கு தெலுங்கு மொழியில் அதிகம் நாட்;டம் கொண்டவர்கள்
சேலம் பகுதியில் உள்ள „கொண்ட ரெட்டி… என்ற பிரிவு ரெட்டிகள் தங்களுக்கென திருச்செங்கோட்டு மலையடிவாரத்தில் மடம் நிறுவியும் வாழ்ந்தனர். இவர்கள் சேலம் மாவட்டம் கொளத்தூர், பவானி, ஆத்தூர் பகுதிகளிலும், திருச்சி, பெரம்பலூர், நெல்லை, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றனர். சமுதாய வளர்ச்சிக்கேற்ப வேறு சில மாவட்டங்களுக்கும் குடி பெயர்ந்து வருகின்றனர்.
தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி பகுதியில் „குறிக்காரர் ரெட்டி ஜனசங்கமும்… என்ற அமைப்பு செயல்படுகிறது. இவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். இவர்கள் தங்களை கொண்ட ரெட்டிகளின் பிரிவில் சேர்க்கப் போராடிவருகின்றனர்.
சென்னை ஆலந்தூர் பகுதியில் „ரெட்டிஜனோபகார சங்கமும்… நடைபெறுகின்றன. இதன் மூலம் யுதுளு நிதி நிறுவனமும்,யுதுளு மேல்நிலைப்பள்ளி ஒன்றும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தெலுங்கு பேசும் இதர சமூகத்தவரும் இடம் பெற்றுள்ளனர். பல கோவில் நிர்வாகங்களும் இவர்களின் செயல்பாடுகளில் இடம் பெற்றுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை ஒன்றுபட்ட பல உட்பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு வலுவான ரெட்டி அமைப்பு இல்லை. எனவே பொதுவான பரந்த நோக்கத்திற்காக தியாக எண்ணங்களுடன் ஒரு சில இளைஞர்களின் தீவிர முயற்சியால் ‘ரெட்டி இளைஞர் பேரவை” என்ற அமைப்பை தொலைக் காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் பிரபலமான திரு ஆ. ரமேஷ் பிரபா அவர்கள் தலைமையில் உருவாக்கினர். இவரது காலத்தில் வலுவான அடித்தளத்தை அமைத்து ரெட்டி இளைஞர் பேரவை சிறப்புடன் செயல்பட தொடங்கியது. இவரைத் தொடர்ந்து திரு. டு. தமிழரசன் அவர்கள் தலைமையில் இளைஞர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
back to previous page