கலைத் துறையில் பல வெற்றிப் படங்களை தந்து மக்கள் மனத்தில் நீங்காத இடத்தைப் பெற்ற பிரபல இயக்குநர்களாக டைரக்டர் ஸ்ரீதர்,ஊ.ஏ.ராஜேந்திரன்,டீ.N.மு. நாகிரெட்டி திருச்சி மாவட்டம் வேங்கடத்தானூர் N. வெங்கடேஷ், திருவள்ளுவர் கலைக் கூடம் திரு. ளு.ளு. துரைராஜ் போன்றோர் பிரசித்தி பெற்றவர்கள். இவர்கள் கலைத்துறையில் வியாபார நோக்கம் மட்டுமன்றி மக்களிடத்தில் மண்டிக் கிடந்த பழமையை ஒழித்துப் புதிய சிந்தனைகளைத் தூண்டியவர்கள் எனலாம்.
நடிப்புத் துறையில் படாபட் ஜெயலட்சுமி தனக்கென திரைப்படத் துறையில் தனி இடத்தைப் பெற்றிருந்தார். இதேபோல் பிரபல நடிகை ரோஜா 100 படங்களுக்கு மேல் கதாநாயகியாய் நடித்தவர். இவர் நடிப்புத் துறையில் குறுகிய காலத்திலேயே தமது நடிப்புத் திறமையால் பிரபலமானவர். ஏரானமான ரசிகர்களின் உள்ளங்களில் கனவுக் கன்னியாக இருந்த இவர் பல திரை உலக விருதுகளையும், தேசிய விருதுகளையும் பெற்றவர். இவருக்கென இத்துறையில் ஒரு தனி இடம் பிடித்தவர்.
னு. குமரேசன் என்ற இயற்பெயரைக் கொண்டவர் பிரபல நடிகர் மாவீரன் நடிகர் நெப்போலியன். இவர் நடிப்புத் துறையில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு சிறப்பான இடத்தைப் பெற்றவர். இவர் இயக்குநர் பாரதிராஜாவால் „புது நெல்லு புது நாத்து… என்ற திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகி முன்னணி நட்சத்திரங்களின் வரிசையில் இடம் பிடித்தவர். இவரின் சீவலப்பேரி பாண்டி, கிழக்குச் சீமையிலே, எஜமான் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் உள்ளத்திலும், பொது மக்களிடத்திலும் நீங்காத இடம் பிடித்தவர். கலைத் துறைக்கென தமிழக அரசால் வழங்கப்படும் ‘கலைமாமணி” விருதைப் பெற்ற இவர் தமிழ் தவிர பிற மொழிகளிலும் இவரது கலைப்பணி தொடர்கிறது. குறிப்பாக ‘கல்யாண வீடு என்றால் மாப்பிள்ளையாக இருக்கணும், எழவு வீடு என்றால் பிணமாக இருக்கணும்” என்ற இவரது வசனம் இன்றும் அனைவரின் காதுகளில் சுவையாக ஒலிக்கிறதுƒ நீங்காத நினைவாகவும் இருந்து வருகிறது. இவரின் இவ் வசனம் போல இவர் எடுத்து வரும் எல்லா முயற்சியிலும் முதவிடம் பெற வாழ்த்துவோம். ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் மக்கள் மனதிலும் இடம் பிடிக்கத் தவறவில்லை. இவரே தமிழகத்தின் மிகப் பெரிய சட்ட மன்றத் தொகுதியான இன்றைய வில்லிவாக்கம் தொகுதியின் தி.மு.க. வின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இது தவிர மதுரையில் P.மு. சுப்பா ரெட்டியால் நடத்தப்பட்ட ஒரிஜினல் பாய்ஸ் என்ற நாடக கம்பெனியில் பிரபலமான திரைப்பட நடிகர்கள் உருவானார்கள். குறிப்பாகவு.சு. மகாலிங்கம்,ஆ.N. நம்பியார், பத்மஸ்ரீ சிவாஜிகணேசன் போன்றவர்கள் இக் கம்பெனியால் உருவாக்கப்பட்டவர்கள்.
கலைத் துறையில் நவீன வில்லிசைக் கலைஞர் ஆ.ளு. இராஜலட்சுமி „கலைமாமணி… விருது பெறும் அளவிற்கு உயர்வடைந்தவர். விளாத்திக்குளத்தைச் சேர்ந்த இவர் வீரபாண்டிய கட்டபொம்மன்,பாரதியாரின் கதைகள், பாஞ்சாலி சபதம், அரிச்சந்திரன் கதைகள், ஐயப்பன் மகிமை போன்றவற்றை வில்லுப்பாட்டின் மூலம் பாடி மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். தொலைக்காட்சி, வானொலியின் மூலம் பல நிகழ்சிசிகளை நடத்தி தேச பக்தியையும், நாட்டுப் பற்றையும் வளர்த்து வருபவர்.
திருச்சி மாவட்டம் கீரம்பூரை சேர்ந்த திரு. மு.ஆ. ஆதிமூலம் தலைசிறந்த ஓவியக் கலைஞர். இவர் உலகப் புகழ்பெற்ற கலைஞர். பல்வேறு கண்காட்சிகளில் இவரின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. ஓவியக் கலையின் மூலம் எளிய பாமர மக்களின் உணர்வையும், சிந்தனையையும் தூண்டும் ஆற்றல் படைத்தவர்.
சினிமாத் துறை சார்ந்த பத்திரிகைகளை நடத்தியவர் திரு. பி. விசுவநாத ரெட்டி ஆவார். இவர் „பொம்மை…, „மங்கை… ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக சென்னையிலிருந்து வெளியிட்டவர். சென்னை நகர ‘துணை செரீப்” ஆக நியமனம் செய்யப்பட்டு சிறப்பாகப் பணியாற்றியவர்.
திரு. P. நாகி ரெட்டி ஆந்திரப் பிரதேசம் கடப்பை மாவட்டம் கொட்டிப்பாடு கிராமத்தில் பிறந்து சென்னையில் சினிமா துறையில் பிரபலமாக விளங்கியவர். தாதாசாஹெப்‡ பால்கே விருது பெற்ற இவர் விஜயா-வாஹினி ஸ்டியோவை நிறுவியவர். கலைத் துறையில் திரு P. நாகிரெட்டி அவர்களைக் ரெட்டிகளில் சிறந்த சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களுடனும், ஆந்திர முன்னாள் முதல்வர் திரு என்.டி. ராமராவ் அவர்களுடனும் இணைந்து நெருக்கமாக பணியாற்றியவர். கலைத்துறையில் பலரும் இவர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தனர்.