மொழி

மொழி


மொழி என்பது உலகில் இயற்கையாக அமைந்ததன்று. மக்கள் தங்களுக்குள் கருத்தை பரிமாறிக் கொண்டு பழக உருவாக்கிக்கொண்ட ஒரு கருவியேயாகும்.

முதலில் விந்திய மலைக்கு அருகில் உள்ள திரிலிங்கம் என்ற தலம் ரெட்டிகளின் குடியேற்றமாக ஆதியில் அமைந்தது. அங்கிருந்த பூர்வீக ஆந்திர மக்களின் மொழியோடு தமது பிராக்கிருத மொழியையும் இணைத்துப் பேசினர். அது ஒரு புது மொழியாக உருவெடுத்து „தெலுங்கு… என்றாயிற்று. இவர்கள் வாரங்கல் நாடு முழுவதும் குடியேறினர்.

வரலரற்றுக் குறிப்புகளின்படி கிழக்கு கோதாவரி மாவட்டம் நத்தம்பாடு கல்வெட்டுகளில்தான் ஆந்திர பாஷை என்ற சொல் முதன் முதலில் காணப்படுகிறது. திராவிட மொழிக் குடும்பமான தமிழ், கன்னடம், மலையாளம் இவற்றுடன் தெலுங்கும் ஒன்றாகும். (ஆதாரம் P.ளு. ளுரடிசயஅயலெயஅஇ நுஎழடரவழைn யனெ னுநஎநடழிஅநவெ ழக வுநடரபர டுயபெரயபநஇ றுழசடன வுநடரபர குநனநசயவழைn குசைளவ ஊழகெசநnஉந ளுழரஎநnசை 1994) 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வசிஷ்டபுத்திர ஸ்ரீசதகர்ணி என்ற மன்னர் கால நாணயங்களின் மூலம், ஆந்திர தமிழ் மக்களிடையே நல்ல தொடர்பு இருந்தது தெரிய வருகிறது.

பிராகிருதத்தைத் தவிர 18 தேச பாஷைகளைப் பற்றி கவுடில்யா, வாத்சாயனர், பரதர் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் ஆந்திர பாஷையும் ஒன்றாகும். ஆரியர்களின் படையெடுப்புகளினால் சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் பரவியதால் வட இந்தியாவையும், தென்னிந்தியாவையும் இணைக்கும் ஒரு இணைப்பு மொழியாகத் தெலுங்கு விளங்கி வருகிறது.

சமயத்துறையில் இயற்றப்பட்ட சமய நூல்கள் தெலுங்கு மொழி வளர்;ச்;சிக்கு அடித்தளமாக அமைந்தது. திக்கண்ணா என்ற அறிஞர் மகாபாரதத்தைத் தெலுங்கில் மொழிபெயர்த்தார். மாரன்னா என்பவர் எழுதிய மார்க்கெண்டேய புராணமும் தெலுங்கு மொழிக்கு அழகு சேர்த்தது. தெலுங்கு மொழிக்கு ஆற்றிய சேவையைப் போல் தமிழக எல்லையில் வசித்த ரெட்டிகள் தமிழ் மொழிக்கும் பெரும் தொண்டாற்றியுள்ளனர் என்பதை இலக்கியம் என்ற தலைப்பில் விரிவாக காணலாம்.

இன்று மொழிவாரியாகப் பேசும் மக்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் இந்திக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பேசும் மொழி தெலுங்கு ஆகும். இதே போல் தமிழகத்திலும் தமிழுக்கு அடுத்தபடியாக தெலுங்கு மொழி பேசும் மக்களே அதிகம் எனலாம். ரெட்டிகள் மட்டுமல்லாது பிற இனத்தவர்களும் இம் மொழியைப் பேசி வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் ரெட்டிகள், நாயுடு, நாயக்கர், தெலுங்கு பிராமணர்கள், உப்பிலியர், நூற்போரும், சாயமிடுவோரும், நெசவாளர்கள் மற்றும் நாவிதர், தோல் தொழிலாளர்கள், ராஜுக்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.

இவ் வகுப்பாரெல்லாம் வீட்டு மொழியாகத் தெலுங்கையே பேசி வருகின்றனர். இதேபோல் தெலுங்கு மொழி ரெட்டி இனத்தவர்களின் வீட்டில் பேச்சு மொழியாவே வழக்கத்தில் உள்ளது. அன்றாட வாழ்க்கையில் தமிழ்மொழியில் கடிதம், அஞ்சல் வழியாக பணம் அனுப்புதல், விளம்பரப் பலகை, விற்பனைச் சீட்டு போன்றவற்றில் தமிழ் வழக்கத்தில் வந்ததால் ரெட்டிகள் தெலுங்கை மறந்ததில் வியப்பேதுமில்லை. தமிழ்நாட்டில் தமிழ் மொழியே முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. அரசாங்க அலுவலகங்களிலும் தமிழ் மொழியே பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. இது நாளடைவில் இம்; மொழியின் தாக்கத்தாலும் தமிழ் பேசும் மக்களுடன் ஏற்பட்ட கலாச்சாரத்தின் ஊடுருவலாலும் தமிழர்களுடன் ஒன்றுபட்டு ரெட்டி இன மக்கள் தெலுங்கு மொழியை மறந்து வருகிறார்கள். சில பகுதிகளில் தெலுங்கு மொழி பேச்சு வழக்கிலிருந்தும் மறைந்து வரும் சூழ்நிலையே காணப்படுகிறது.