இலக்கியம்

இலக்கியம்

ஆதங்கி நாட்டின் அரசர் புரோலய வேமரெட்டி வடமொழியிலும், தெலுங்கிலும் நல்ல புலமை படைத்திருந்தார். புலவர்களுக்கு பெரும் சன்மானமும், தான தர்மங்களையும் செய்து மிக்க புகழ் பெற்றார். இவர் தமது பாடல்களில் கேள்விகளின் மூலம் மக்களைச் சிந்திக்கச் செய்தவர்.

  • பாலில் கழுவி கரியை வெண்மையாக்க முடியுமா?
  • பரிமாறும் கரண்டி சுவை அறியுமா?
  • பொம்மைகட்கு நீதி புகட்ட முடியுமா?
  • புனித கோதாவரியில் மூழ்கி நாய் சிங்கமாக முடியுமா?
  • சிறுவர் தாங்கினால் தீவட்டி பிரகாசம் குறையுமா?

போன்ற 4000 க்கும் மேல் உள்ள கேள்விகள் மூலம் மக்கள் சிந்தையைத் தூண்டி மூட நம்பிக்கையை அகற்ற அன்றே முற்பட்டவர். இவர்தம் பாடல்கள் ‘துள்ளல்” யாப்பில் அமைந்திருந்தது. து.யு. டூபாய் என்ற அறிஞர் வேமா ரெட்டி பற்றி மிக்க புகழ் வாய்ந்தவர்களில் ஒருவர் என்றும், ‘மெய்விளக்க அறிஞர்” என்றும் புகழ்ந்துள்ளார்.

னுச. பு.P. கிருஷ்ணாராவ் இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஆதங்கிவேமா ரெட்டியின் கையில் கவிதை புதுமையும், செழிப்பும், பொருள் செறிவும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் எள்ளல், வஞ்சகப்புகழ்ச்சி ஆகிய ஆயுதங்களை யோகி வேமா ரெட்டி பயன்படுத்தியதாக” தெரிவித்துள்ளார்.

ரெட்டி அரசின் தலைநகரமாயிருந்த ஆதங்கியிலிருந்து கொண்டவீட்டிற்குத் தலைநகரத்தை மாற்றினார். வென்னெல கண்ட்டி சூரன் என்ற புலவர் இயற்றிய விஷ்ணு புராணத்தில் வேமாரெட்டியைப் புகழ்ந்து கூறியுள்ளார். இவரது புரட்சிகரமான சிந்தனை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“ தம்முடைய வாழ்வை பிராமணர்களுக்கும்
தம்முடைய விருதுகளை ரெட்டியரசர்களுக்கும்
தம்முடைய நீதியை உலக மக்களுக்கும் ஈந்து பெரும்புகழ் படைத்தார் ”

என்று ஆதங்கி புரோலயவேமா ரெட்டியை வியந்து கூறியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் கிராமங்களில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் தனிப்பட்ட ஆசிரியர்கள் எழுதுதல் படித்தல் கணக்கு போடுதல் முதலிய அடிப்படையான கல்வியைப் போதித்தனர். மணல்மீது எழுதுவதும், மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதும் பாடமுறையாக இருந்து வந்தது. ஓலைச் சுவடிகள் புத்தகங்களாக உபயோகப்படுத்தப்பட்டன. கிராமங்களில் மரத்தடியிலும், கோலில் தாழ்வாரங்களிலும் பள்ளிகள் நடத்தப்பட்டன.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பழைய திருச்சி மாவட்டம் பெரம்பலூர் வட்டம்,செங்கணம்சின்ன பண்ணைவிருத்தாசல ரெட்டியார் நல்ல தமிழ் புலமை பெற்ற அறிஞராக விளங்கினார். இவர் இலக்கண இலக்;கியங்களை நன்றாக, தெளிவாக பாடம் சொல்லும் ஆற்றல் படைத்தவர். இவர்தம் பெருமையை அறிந்து வெங்கடசுப்பையர் தமது மகன் வெங்கட்டராமனை அழைத்துக் கொண்டு நண்பர்களின் உதவியால் செங்கணம் சென்றார். தமது மகனுக்கு இலக்கண இலக்கியங்களை போதிக்க ரெட்டியாரிடம் கேட்டுக்கொண்டார்.

மாணவனின் நிலையும், தந்தையாரின் குடும்ப நிலையும் அறிந்த விருத்தாசல ரெட்டியார் அவர்கள் தங்குவதற்கு இடமும், உணவுக்கு மாதம் இரண்டு கலம் நெல்லும், செலவுக்கு ரூபாய் இரண்டும் மாதா மாதம் கொடுத்து வந்ததோடு காரிகை பாடம் தொடங்கி, யாப்பிலக்கணத்தையும் போதித்தார். புதிய செய்யுள் இயற்றும் முறையையும் கற்பித்ததோடு மேற்படிப்புக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் சென்று கற்றுக் கொள்ள ஆலோசனை வழங்கி உதவிகளை செய்தார். அந்த மாணவர் வெங்கட்டராமனே பிற்காலத்தில் தமிழுலகம் போற்றும் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் பெருமகனாக விளங்கியவர். இதனையே ஐயர் தம் சுயசரிதையில் (பக்-196) நினைவு கூருகையில், “தங்க இடம் கொடுத்து, உண்ண உணவு அளித்து, உடுத்த உடை வழங்கியும் தமக்கு தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்த செங்கணம் சின்னப் பண்ணை விருத்தாசல ரெட்டியாரின் ஒளிப்படம் (Phழவழ) வெளியிடக் கிடைக்காமல் அவர்களின் பேரன் வெண்பாவூர் விருத்தாசல ரெட்டியார் அவர்களின் படத்தை வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் விருத்தாசல ரெட்டியாரிடம் நான்கு மாதங்கள் பாடம் கேட்டேன். அவர் பாடம் சொன்ன முறையை நான் என்றும் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். நான்கு மாதம் கேட்ட பாடம் என் வாழ்நாள் முழுவதும் பயன்பட்டு இன்பம் தருவதாயிற்று” என்று குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் உள்ள சென்னிகுளம் கிராமத்தில் 1865-இல் பிறந்த அண்ணாமலை ரெட்டிக்கு தாய்மொழி தெலுங்கு என்றாலும், இவர் இனிய தமிழில் காவடி சிந்து இயற்றி இறவாத புகழ் பெற்றவர். இவர் தமிழ் தாத்தா உ. வே. சா. விடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பாடம் கேட்கும் பேறு பெற்றவர். அண்ணாமலையார் தமிழ் மக்கள் பாடும் நாட்டுப்புற பாடல்களின் நடையிலேயே „காவடிச் சிந்து… பாடல்கள் அமைத்தவர். அரசகுலத்தின் குலதெய்வப் பாடல்கள், மன்னர்களைப் பாராட்டிப் பாடும் பாடல்கள், முருகப் பெருமானைப் பற்றிய பாடல்கள் மூலம் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார். அண்ணாமலை ரெட்டியாரின்தனிப் பாடல்கள் சில இதுவரை அச்சுக்கு வராததாகவே மறைநடது போயிற்று. இன்றும் சிலர் காவடிச் சிந்து கவிதை எழுதுகின்றனர். ஆனால் அண்ணாமலை ரெட்டியாரே தமிழ் இலக்கியத்தில் முதன்மையானவர் எனலாம். இவர் ஊற்றுமலை ஜமீந்தாரிடம் ஆஸ்தான புலவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைமேதை திருமதி ஆ.ளு. சுப்புலட்சுமி அவர்களால் ஐக்கிய நாட்டு சபையில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் பாடப்பட்ட பாடல் காவடிச் சிந்து பாடல் என்பது செவிவழிச் செய்தியாகும்.

கோவில்பட்டி மு. ராமசாமி ரெட்டியார் காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியாருக்கு அவரது பிறந்த ஊரில் மணி மண்டபமும், உருவச் சிலையும் அமைத்துக் கொடுத்துள்ளார். அண்ணாமலை ரெட்டியாரின் இலக்கியப் பணியைப் போற்றும் வகையில் ஒவ்வோராண்டும் தை அமாவாசை அன்று அன்னதானமும், சிறப்புக் கருத்தரங்கமும் விழா எடுத்து வருபவர். சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்.

1938-இல் சமூகரெங்கபுரம் வித்துவான் வே. வெங்கடராஜு ரெட்டி சென்னை பல்கலைகழகத்தில், அதன்அகராதி வெளியீட்டு குழு உறுப்பினராக இருந்தார். இவர் பரணர், கபிலர், பன்னிரு புராணம், தொல்காப்பிய எழுத்ததிகார ஆராய்ச்சி ஆகிய பல நூல்களை எழுதிப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இலக்கிய ஆராய்ச்சியில் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இதில் சிந்தாமணி ஆராய்ச்சி நூல் குறிப்பிடத் தக்க ஒன்று. இதில் பல புதிய நுண் கருத்துக்களை முன்னர் எவரும் காணாதவற்றைப் புலப்படுத்தியிருக்கின்றார். சாதி, சமயம், நாடு, மொழி முதலிய வேற்றுமைகளை மறந்து, மெய்ப்பொருள் காண்பதே அறிவுக்கு இலக்கணம் என வலியுறுத்தியவர்.

இவரின் „இளைஞர் தமிழ் இலக்கணம்… என்னும் இலக்கண நூல் பலருக்கும் வழிகாட்டியாக விளங்கியது. முதன் முதலில் ‘தமிழ்க் கலைக் களைஞ்சியத்தை” உருவாக்க கன்னி முயற்சி எடுத்தவர் இவரே. இவர் தமிழ் வளர்ச்சியின் பொருட்டு சென்னையில் சென்னைத் தமிழ்ச் சங்கம் என்னும் சங்கம் ஒன்றை நிறுவினார். 1941-இல் சென்னையில் நடைபெற்ற ஸ்ரீ வைஷ்ணவ மகா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் இவரே. 1955-இல் தெலுங்கு மொழியும் ரெட்டி அரசர்களும் என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி தாம் பிறந்த ரெட்டி இனத்திற்குப் பெருமை சேர்த்தவர். இதே போல் மகாவித்வான் புதூர் வேங்கிடசாமி ரெட்டியும் கீர்த்தி பெற்ற தமிழ்ப் புலவர்களில் முதன்மையானவர்.

இதேபோல் ஓ.பி.ஆர். தெலுங்கர் ஆனாலும் தமிழையே அதிகம் பேசினார். நான் தமிழன் என்றும், என் தாய் மொழி தமிழ்தான் என்றும் கூறிவந்தார். தமிழை ஆட்சி மொழியாக்க முதல் நடவடிக்கை எடுத்தவர் ழு.P.சு. தான். இவர் தமது ஆட்சியில்1948-ல் தமிழை ஆட்சி மொழியாக்கியும் திருக்கோவில்களில் தமிழ் மணம் பரப்பவும் ஆணையிட்டார். இவரது ஆட்சியிலேயே தமிழில் கலைக்களைஞ்சியம் வெளியிடுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதன்முதலில் ‘தமிழக ஆஸ்தான கவிஞராக” கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களை நியமித்தும், தமிழ்க் கல்லூரிகளுக்கு நன்கொடை வழங்கியும் தமிழ் வளரவும் வித்திட்டவர். 12-3-1949-இல் பாரதியார் பாடல்களை அரசுடமையாக்கியும், பாரதிவிழாவை அரசு விழாவாக எட்டையபுரத்திலும் நடத்தியவர் ஓமாந்தூராரே.

கல்கி… கிருஷ்ணமூர்த்தியைத் தலைவராகவும், முதிர்ந்த பழம்பெரும் எழுத்தாளர் நாரணதுரைக் கண்ணனைச் செயலாளராகவும் கொண்டு சென்னை இராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற கம்பர் கழக மாநாட்டை நடத்த அனுமதித்த ஓமந்தூரார் அதன் மாபெரும் ஏற்பாடுகளில் பெரும் பங்கு வகித்தவர் முதல் மாநில முதல்வர் ஓமந்தூரார். மேலும் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறை படுத்தப்படுவதற்கு 16-7-1948ல் இதற்கென ஒரு குழுவையும் அமைத்தார். தமிழ்மொழியும், தமிழனும், தமிழ்நாடும் உலகளவில் முன்னேற்றமடைவதற்கும் முதற் காரணமாக விளங்கியவர் ஓமந்தூராரே.

பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்,ஆ.யு.இ டீ.ளுஉ.இ டு.வு.இ ஏiஎயnஇ Ph. னு; னு.டுவை. திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் கோட்டாத்தூர் இவர்தம் சொந்த ஊர். ஞானியார் குடும்பத்தைச் சார்ந்தவர். 1915 ஆகஸ்டு 27-இல் பிறந்தவர். ஒன்றரை வயதில் தந்தையை இழந்தவர். அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவர். எட்டு வயதிலேயே உயர் கல்வி பெற ஆசைப்பட்டவர். இறையருளாலும் நல்லூழாலும் அனைத்தும் கைவரப் பெற்றவர். தம் சொந்த முயற்சியால் நல்லாசிரியர் வாய்த்தமையால் அனைத்துப் பட்டங்களையும் பெற்றவர். இன்றும் (வயது 90) படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பவர். (தினம் 15 மணி). 20 வயதிலிருந்தே இவற்றைச் செய்து வருபவர். 9 ஆண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (1941 - 50)ƒ 10 ஆண்டுகள் காரைக்குடி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் - துறைத் தலைவர் (1950-60). திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை நிறுவி பேராசிரிய-துறைத் தலைவரானவர். (1960-78).

ஓய்வுக்குப் பின் தமிழக கலைக் களஞ்சியம் முதன்மைப் பதிப்பாசிரியர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்-காஞ்சித் தத்துவை மையம் மதிப்பியல் பேராசிரியர், தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபு-வழிப் பண்பாட்டு நிறுவனத்தின் சென்னை பல்கலைக் கழகத்தின் மதிப்பியல் இயக்குநர், தமிழ் இலக்கியத் துறை வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர், மதுரை-காமராஜர் பல்கலைக் கழக-கல்வியியல் கழக வாழ்நாள் உறுப்பினர். பல பல்கலைக் கழகங்களில் பல் வேறு வகையில் தொடர்புடையவர். 87 மாணவர்கட்கு வழிகாட்டியாக இருந்து Ph.னு. பட்டம் பெறச் செய்தவர். இன்றும் மூவருக்கு வழிகாட்டியாக இருப்பவர். 120க்கும் மேற்பட்ட பல துறை நூல்களின் ஆசிரியர். 14 நூல்கள் அரசு, பல்கலைக் கழகம், பிற நிறுவனம் மூலம் பரிசுகள் பெற்றவை. 15க்கும் மேற்பட்ட விருதுகள் (பணம் பட்டம் உட்பட) பெற்றவர். விருதுத் தொகைகள் முழுவதையும் பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளை நிறுவப் பயன்படுத்தி வருபவர். இதுகாறும் 9 பல்கலைக் கழகங்களில் 25 ஆயிரம் வீதம் தம் பெயரிலும்-துணைவியார் பெயரிலும் அறக்கட்டளைகளை நிறுவியவர். „தொண்டே செய்து என்றும் வழியொழுகப் பண்டே பணித்த பணி வகையே… என்ற நம்மாழ்வாரின் குறிக்கோளைத் தம் குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்.

அறிவியலில் நாட்டங் கொண்ட இவர் தமிழ், சமயம், தத்துவம் இவற்றின்பால் ஈர்க்கப் பெற்றவர். 90 அகவையில் உள்ள இவர் „உப்பிற்கும் காடிக்கும் கூற்றாயிராமல்… (தெண்டச் சோறு) தமிழ், சமயம், தத்துவம் பணியில் ஆழங்கால் பட்டு அவற்றால் பெறும் அறிவை எழுத்து வடிவமாக்கி வருபவர். ஆண்டிற்கு ஆறு நூல்களுக்குக் குறையாமல் பதிப்பித்து அறிஞர்களைக் கொண்டு விழாக்கள் எடுப்பித்து நூல்களை வெளியிட்டு வருபவர். வள்ளுவர் குறிக்கோளின்படி மனத்துக் கண் மாசில்லாமல் இருக்கப் பழகியவர். விநாயகர், முருகப் பிரான், திருவேங்கடவன் இவர்தம் மனத்தில் எழுந்தருளியிருப்பவர்கள்.

இன்றும் துணைவியுடன் இருப்பவர். இவருக்கு இரண்டு குமாரர்கள். மூத்தவன் கோயம்பேடு எம்.ஜி.ஆர் நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் துறைத் தலைவராக இருப்பவர். இவர்தம் இரு பெண்கள் அமெரிக்காவில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள். இளைய மகன் (மருத்துவர்) அமெரிக்காவில் இருப்பவர்ƒ மனைவியுடன் வாழ்பவர். இவர்தம் இரு குமாரர்களில் ஒருவர் மருத்துவக் கல்வியும், மற்றோருவர் பொறியியல் (கணினி) கல்வியும் பெற்று வருபவர்கள்.

நெல்லை மாவட்டம் பரமேசுவரபுரம் கிராமத்தைச் சேர்ந்த னுச. ஏ. சங்கரநாராயணன் தமிழ் இணைய பலகலைக் கழகத்தின் இயக்குநராக 15-11-2004-இல் பொறுப்பேற்றார். தமிழக அரசின் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் தேர்வு வல்லுனர் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்த இவர் 78-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் பன்னாட்டு கருத்தரங்குகளில் சமர்ப்பித்தவர். இவர் முதலில் அண்ணா பல்கலைக கழகத்தில் கணினி மைய இயக்குநராகவும், தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் தலைவராகவும், அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் சிறப்பு அலுவலராகவும், கிரஸண்ட் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் இருந்தவர். தமிழ் மொழிக்கு கணினி மூலம் பெருமை சேர்த்ததன் மூலம் ரெட்டி இனத்திற்கே பெருமை சேர்த்தவர்.

back to previous page